பேய் பிடித்த லட்சுமிமேனன்… மீண்டும் 'ஈரம்' கூட்டணி…மிரட்டவிட்ட டீசர்…!

ஈரம் பட கூட்டணியில் உருவாகியுள்ள சப்தம் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது. 

Apr 12, 2024 - 20:42
பேய் பிடித்த லட்சுமிமேனன்… மீண்டும் 'ஈரம்' கூட்டணி…மிரட்டவிட்ட டீசர்…!

ஈரம் பட கூட்டணியில் உருவாகியுள்ள சப்தம் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அறிவழகன், ஈரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அறிமுக படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் அறிவழகன். இப்படத்தின் கதை, காட்சி அமைப்பு இன்றும் பேசப்படுகிறது. தொடர்ந்து, வல்லினம், ஆறாவது சினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கினார். அதோடு, தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரியலை இயக்கிய அவர், தற்போது சப்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். 

இந்நிலையில், தனது முதல் படம் போலவே த்ரில்லர் ஜானரில் 'சப்தம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் அறிவழகன். ஈரம் படத்தில் ஹீரோவாக நடித்த ஆதியே இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லீ உட்பட பலர் நடித்துள்ளனர். 

ஈரம் படத்தில் தண்ணீருக்கும், பேய்க்குமான உறவு முக்கியமான விஷயமாக இருக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட சீன்களில் பேய் வரும். அதேபோல், சப்தம் படத்தில் சவுண்டுக்கும், பேய்க்கும் தனி தொடர்பு உள்ளதாக கதை நகர்கிறது. பேயை நவீன கருவி மூலமாக கண்டுபிடிப்பவராக ஆதி வருகிறார். யார் பேய் என்பதுதான் சஸ்பென்ஸாக உள்ளது. 

இந்நிலையில், தமன் இசையில் உருவாகியுள்ள 'சப்தம்' படத்தின் மிரட்டல் டீசர் இன்று(மார்ச்-12) வெளியாகி உள்ளது. பேய் படங்களுக்கே உரிய கேமிரா கோணம், சஸ்பென்ஸ், சவுண்டு, எடிட்டிங் டீசரில் தெரிகிறது. டீசரில் ஒரு காட்சியில் லட்சுமிமேனன் பேய் பிடித்தவராகவும் வருகிறார்.  7 ஜி சிவா தயாரிக்கும் இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விரைவில்  ரிலீஸ் ஆகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow