மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு

Feb 14, 2024 - 01:48
Feb 14, 2024 - 01:48
மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. மேலும், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3.72 சதவீத வாக்குகளையும், 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில்  2.52 சதவிகித வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் பெற்றது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow