கால்டுவெல் நல்லா படிச்சவர்... பட்டங்களின் நகலை வெளியிட்ட அரசு...
கால்டுவெல் பள்ளி படிப்பை முடிக்காதவர் என்றும், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மதமாற்றத்திற்கு நியமிக்கப்பட்டவர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
ராபர்ட் கால்டுவெல் பள்ளிப்படிப்பை முடிக்காதவர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு, அவர் பட்டம் பெற்ற சான்றிதழ்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அண்மையில், சென்னை ராஜ்பவனில் நடந்த அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தின விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, ராபர்ட் கால்டுவெல் பற்றி சில கருத்துகளை தெரிவித்திருந்தார். கால்டுவெல் பள்ளி படிப்பை முடிக்காதவர் என்றும், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மதமாற்றத்திற்கு நியமிக்கப்பட்டவர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் ஆளுநர் ஆர். என் ரவி இவ்வாறு பேசியிருப்பதாக, திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில், நெல்லை மாவட்ட கால்டுவெல் மையத்தின் பிரதிநிதிகள் தமிழறிஞர் கால்டுவெல்லின் கல்வித்தகுதி தொடர்பான சான்றிதழ்களை பகிர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராபர்ட் கால்டுவெல் பி.ஏ படித்தற்கான சான்றிதழும், திராவிட மொழிகளுக்கு அவர் ஆற்றிய சேவைகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட டிப்ளமோ சான்றிதழும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை பகிர்ந்து, தமிழக உன்மை சரிபார்பு குழு, தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என வலியுறுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், 1856ஆம் ஆண்டில் கால்டுவெல் இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவிடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சான்றிதழை நெல்லை மண்டலப் பேராயர் பர்னபாஸ் வெளியிட்டிருக்கிறார்.
What's Your Reaction?