பஞ்சாமிர்தம் காலாவதியான விவகாரம்.... கடைகளை அடைத்துவிட்டு எஸ்கேப்பான வியாபாரிகள்...
பழநி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கூடத்தில் காலாவதியான பஞ்சாமிர்தம் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தயாரிக்கும் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஆய்வு செய்தனர். அப்போது, திடீரென பஞ்சாமிர்த கடைகள் அடைக்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழநி கோயிலில் கடந்த சில நாட்களாக காலாவதியான பஞ்சாமிர்தம் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் கோயிலில் விற்கப்படும் லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
புகார்கள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையில் பஞ்சாமிரத் தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரசாதங்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற நிலையில் அதற்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இதன் தொடர்ச்சியாக இன்று (13.12.2024) தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கூடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்லதுரை ஆய்வு செய்தார். இதை அறிந்த வியாபாரிகள் கடைகளை அடைத்து சென்றனர். இதனால் பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்க முடியாமல் தவித்தனர்.
What's Your Reaction?