குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

திமுகவிற்கு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் கடைசி என்றும், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல் எனவும் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். 

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:"இந்தியாவே இன்று மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் என்ன பேசுவார் என்று நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பிரதமர் மோடி தமிழகம் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. எங்களும் மக்கள் வெள்ளம், மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். இதுவே இந்த கூட்டணியின் வெற்றிக்குச் சான்று.உரிய இடத்தையும் காலததையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே ஆளலாம். நமக்கும் அதுக்கான காலம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டிவதைக்கும் அரசு தேவையா? ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? நான்கே முக்கால் ஆண்டுகளில் திமுக கொடுத்தது துன்பம், வேதனைதான்.மு.க. ஸ்டாலின் இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் ஊழல். ஸ்டாலின் குடும்பம் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் திமுகவில் உழைத்தவர்கள் தெருவில் இருக்கிறார்கள்.

எந்தவொரு தகுதியும் இல்லாத உதயநிதிக்கு முதலில் எம்எல்ஏ, அமைச்சர், தொடர்ந்து துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள். இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. திமுகவுக்கு இது இறுதித் தேர்தல். தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம்.எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி, வலிமையான கூட்டணி. தேர்தல் எனும் இந்த போரில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டுவோம்.

குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல், குடும்ப ஆட்சிக்கு ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். வரும் தேர்தலில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியமைக்கும்.அதிமுக ஆட்சியில் மத்திய அரசு அனுமதியளித்த காவிரி நதிநீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை. கரோனா போன்ற காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றியவர் பிரதமர் மோடி" என்று பேசினார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

“இந்த ஊழல் தி.மு.க. ஆட்சியை விரட்டி அடிப்போம், வீட்டுக்கு அனுப்புவோம் என்று இங்கே அனைவரும் வந்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சி முடிவுக்கு இன்று தொடக்கம். தி.மு.க. அரசு என்றாலே ஊழல் அரசு, கொடுங்கோல் ஆட்சி, பூஜ்ஜியம் ஆட்சி.

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்வளத் திட்டம் பூஜ்ஜியம், மருத்துவ கல்லூரி பூஜ்ஜியம், புதிய மின் திட்டம் பூஜியம். இப்படி எல்லாவற்றிலும் பூஜ்ஜியம். தகுதி, திறமை, நேர்மை இல்லாதது தி.மு.க. ஆனால், ஊழலில் மட்டும் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தி.மு.க. உள்ளது. மணல் கொள்ளை, நகராட்சி துறையில் ஊழல், பணியிட மாற்றத்தில் ஊழல், டாஸ்மாக் ஊழல், வரி ஏய்ப்பில் ஊழல், கனம ஊழல், நெல் கொள்முதலில் ஊழல் என இப்படி ஒவ்வொரு துறையிலும் ஊழல். இப்படி, ரூ.6 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். இவர்களை துரத்தி அடியுங்கள்.

வாயை திறந்தாலே பொய். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 13 சதவீதம்தான். இது வெட்கக்கேடு. பரீட்சையில் 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் பாஸ். 13 மார்க் எடுத்தால் பெயில். அப்படி பார்த்தால், பெயிலான கட்சி தி.மு.க.

தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் ரத்து, கூட்டுறவுக் கடன் ரத்து என்று எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டார்கள். நேற்று கூட, ரூ.12 லட்சத்து 16 ஆயிரம் கோடி தொழில் முதலீடு வநந்துவிட்டதாக மிகப்பெரிய பொய்யை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

உண்மையில் வந்தது ரூ.1 லட்சம் கோடிதான். தமிழக மக்களே தி.மு.க.வை மன்னிக்காதீர்கள். இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கின்ற தி.மு.க.வை அகற்றுங்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow