கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு சு.வெ. தரமான செய்கை! - கையோடு கூட்டிவாருங்க என பதில்

Feb 29, 2024 - 12:21
Feb 29, 2024 - 12:22
கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு சு.வெ. தரமான செய்கை! - கையோடு கூட்டிவாருங்க என பதில்

கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கொடுத்துள்ள ரீப்ளே இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எழுத்தாளரும், அரசியல்வாதியுமான சு.வெங்கடேசன், நாடாளுமன்றத்தில் பல்வேறு மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசி வருகிறார். இவர், மதுரை மக்களவைத் தொகுதிகளின் பிரச்னைகளை ஊடகங்கள் வாயிலாக எடுத்துரைத்தும் வருகிறார். 

இந்த நிலையில், மதுரையில் 'கண்டா வரச்சொல்லுங்க' என்று சு.வெங்கடேசனைக் காணவில்லை என்று கூறி போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், "கண்டா வரச் சொல்லுங்க.. எங்க தொகுதி எம்.பி.-ஐ கண்ட வரச் சொல்லுங்க" என சு.வெங்கடேசன் காணவில்லை என்று மதுரை நாடாளுமன்ற தொகுதி மக்கள் கேட்பது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் விளக்கம் ஏதும் கொடுக்காமல், சிறப்பான தரமான சம்பவத்தை செய்துள்ளார். தான் காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டருக்கு அருகே சென்று புகைப்படம் எடுத்து, தன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், "I am Waiting #கையோடுகூட்டிவாருங்க" என்று சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow