ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை ஆதரிப்பது திமுக அரசு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை ஆதரிக்கும் அரசாக திமுக அரசு இருப்பதாக மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: "2026 ஆம் ஆண்டின் எனது முதல் தமிழக பயணம். பொங்கலுக்குப் பிறகு தமிழகம் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஏரி காத்த ராமரை போற்றி வணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழ்நாட்டின் நலனுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். சில நாள்களுக்கு முன்பு எம்ஜிஆரின் பிறந்தநாளாய்க் கொண்டாடினோம். இன்று சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளும்கூட. அவருக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
அலை கடல் என மக்கள் வெள்ளம் திரண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. அந்த செய்தி, ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்நாடு இப்போது தயாராகிவிட்டது. தமிழ்நாடு என்டிஏ - பாஜகவின் அரசை விரும்புகிறது.
இந்த மேடையைப் பாருங்கள், காட்சியைப் பாருங்கள். தமிழ்நாட்டில் எதிர்காலத்தை நிர்ணயிருக்க மேடையில் இந்த தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒரே ஒரு எண்ணத்தோடு உறுதிப்பாட்டோடு அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு.
தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி விட்டது.தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.நீங்கள் திமுகவுக்கு 2 முறை வாய்ப்பு அளித்தீர்கள், ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இளைத்துவிட்டார்கள்.
வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக, ஆனால் செய்த பணிகள் பூஜ்யம்தான். திமுக ஆட்சியை CMC ஆட்சி என்று கூறுகிறார்கள். அதாவது ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை(corruption, mafia, crime) ஆதரிக்கும் அரசு. இந்த திமுக, ஊழல் அரசை வேரோடு கிள்ளி ஏறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை, நம்பகத்தன்மை இல்லை. ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது"
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். தமிழ்நாட்டை ஊழலற்ற, பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக என்றால் சிம்சி. அதாவது கிரைம், மாபியா மற்றும் கரப்சன்.திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. திமுக ஆட்சியை விரட்டி அடிக்கும் கவுன் ட்டவுன் தொடங்கி உள்ளது. திமுக அரசை கிள்ளி எறிய வேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளனர்.தமிழ்நாட்டிற்கு இரட்டை என் ஜின் அரசு வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஜனநாயகம் இல்லை,. தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டது. ஊழல் மலிந்துள்ளது குழந்தைக்கும் தெரியும்.
இந்தியாவை வளம் பொருந்தியதாக மாற்றியது தமிழக பாரம்பரியம். தமிழ்நாட்டின் கலாசாரம், ஆன்மீகம் இந்தியாவின் பெருமை. திமுகவினர் கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு ஆமாம் சாமி போட வேண்டும்.பாஜகவின் கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மும்மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்துள்ளது மத்திய அரசு.வளர்ச்சி திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி வழங்கி உள்ளது. காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி வழங்கி உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
What's Your Reaction?

