GOAT Audio Launch: லியோவில் மிஸ்ஸிங்… GOAT ஆடியோ லான்ச் பிளான்… விஜய் எடுத்த முடிவு..?
விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஆடியோ லான்ச் லொக்கேஷன் குறித்து தரமான அப்டேட் கிடைத்துள்ளது.
சென்னை: வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். யுவன் இசையில் விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியே இப்படத்தில் நடித்து வருகிறது. சென்னை, தாய்லாந்து, ரஷ்யா என பல லொக்கேஷன்களில் இதுவரை கோட் ஷூட்டிங் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில், சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா புறட்டுச் சென்றார் விஜய். இதற்காக சென்னை விமான நிலையம் சென்ற விஜய்யின் வீடியோக்கள் வைரலாகின.
இதனிடையே கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த மாதம் வெளியானது. அதேவேகத்தில் இரண்டாவது பாடலை வெளியிட படக்குழு ரெடியாகிவிட்டது. ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் செகண்ட் சிங்கிள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கோட் படத்தின் ஆடியோ லான்ச் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தின் ஆடியோ லான்ச் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் புலம்பித் தீர்க்க, படம் வெளியான பின்னர் லியோ வெற்றி விழாவை அதே நேரு ஸ்டேடியத்தில் நடத்தியது படக்குழு. முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறலாம் என சொல்லப்பட்டது. அதன்பின்னர் மதுரை அல்லது கோவையில் நடக்கலாம் எனவும் அப்போது தகவல்கள் வெளியாகின. கடைசியாக இசை வெளியீட்டு விழாவே ரத்து செய்யும் நிலைக்குச் சென்றது.
இந்நிலையில், விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்துவிட்டார். அதோடு 2026 தேர்தலில் போட்டியிடவும் இப்போதே ரெடியாகிவிட்டார். இதனால் கோட் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த வேண்டாம் என விஜய் முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் மதுரை அல்லது தமிழ்நாட்டில் வேறு எங்கோ நடக்கலாம் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த பிளான் செய்து வருகிறதாம் படக்குழு.
இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை என்றாலும், லியோவில் விட்டதை கோட் படத்தில் பிடித்துவிடலாம் என விஜய் நினைக்கிறாரோ என்னவோ. அதுமட்டும் இல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. எது எப்படியோ கோட் இசை வெளியீட்டு விழா எங்கு நடந்தாலும், விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர்.
What's Your Reaction?