வைகையில் பெருகிய வெள்ளம்.. கரை புரண்டு ஓடும் தண்ணீர்.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து இன்று 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை வைகை ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுவதால் பொது மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

May 11, 2024 - 18:00
வைகையில் பெருகிய வெள்ளம்.. கரை புரண்டு ஓடும் தண்ணீர்.. 5 மாவட்டங்களுக்கு  எச்சரிக்கை

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3ம் கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகைஅணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை மொத்தம்  915 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மதுரை மாநகர் வைகையாற்று பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளது. 

வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளநீர் செல்வதால் பொதுமக்கள் தண்ணீரில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow