GOAT: பிரசாந்துக்கு விசில் போடும் ரசிகர்கள்… மங்காத்தா டைட்டிலில் டைமிங் காட்டிய GOAT விஜய்!!

விஜய்யின் கோட் படத்தில் இருந்து ’விசில் போடு’ என்ற முதல் பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடலை டாப் ஸ்டார் பிரசாந்த், அல்டிமேட் ஸ்டார் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Apr 15, 2024 - 13:27
GOAT: பிரசாந்துக்கு விசில் போடும் ரசிகர்கள்… மங்காத்தா டைட்டிலில் டைமிங் காட்டிய GOAT விஜய்!!

சென்னை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஜய்யின் கோட் பட ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டிருந்தது. விசில் போடு என்ற டைட்டிலில் விஜய் பாடிய இப்பாடல் இதுவரை 10 மில்லியன் பார்வைகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது. விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் விசில் போடு பாடலுக்கு செம்மையாக ஆட்டம் போட்டு வைப் கொடுத்துள்ளனர். 90ஸ் ஹீரோக்களான விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மூவரையும் ஒரே ஸ்க்ரீனில் பார்த்த ரசிகர்கள், விசில் போடு பாடலை கொண்டாடி வருகின்றனர்.  

அதேநேரம் இந்தப் பாடலின் இசை எதிர்பார்த்தளவில் இல்லை என்றும் ரசிகர்களிடம் அதிருப்தி காணப்படுகிறது. மங்காத்தா படத்தில் அஜித்துக்கு தரமான பார்ட்டி சாங் கொடுத்திருந்தார் யுவன். ‘இது அம்பானி பரம்பரை’ என அஜித் & கோ ஆட்டம் போட்டது இப்போதும் ரசிகர்களை தெறிக்க விடுகிறது. ஆனால், கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளான விசில் போடு, அதில் பாதி கூட இல்லையென கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு புஷ்வானமாக போய்விட்டது விசில் போடு.  

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் விசில் போடு பாடலை பிரசாந்த், அஜித் ரசிகர்கள் சில் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் ஃபீல்ட் அவுட் மோடில் இருந்த பிரசாந்த், கோட் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதுவும் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் நடித்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனை இன்னும் அதிகரிக்க வைக்கும் விதமாக கோட் விசில் போடு பாடலில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவரும் இணைந்து டான்ஸ் ஆடியது சிலிர்க்க வைத்துள்ளது.  

பிரசாந்த் ஏற்கனவே பெஸ்ட் டான்ஸர் தான் என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் விஜய், பிரபுதேவாவுக்கு இணையாக கெத்து காட்டியுள்ளார். இதனை டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், பாடலின் நடுவே வெங்கட் பிரபு இயக்கிய படங்களின் டைட்டிலை ஹைலைட் செய்துள்ளனர். அதில் அஜித்தின் மங்காத்தா டைட்டில் வரும் போது விஜய்யின் குரலில் ‘ஹேய் நண்பா’ என்ற லிரிக்ஸ் வருவதும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளது. இசையில் யுவன் ஏமாற்றினாலும், விஷுவலாக வெங்கட் பிரபு நல்ல ட்ரீட் கொடுத்துள்ளார் என கூறி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow