வெப்ப அலை தமிழ்நாட்டை தாக்கும்.. சென்னையில் அனல் காற்று.. எச்சரிக்கும் வெதர்மேன்

தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Apr 15, 2024 - 12:39
வெப்ப அலை தமிழ்நாட்டை தாக்கும்.. சென்னையில் அனல் காற்று.. எச்சரிக்கும் வெதர்மேன்


தமிழ்நாட்டில் மழைக்காலம், பனிக்காலம் முடிந்து பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெப்ப அலை வீசத் தொடங்கியது. இதனால் வானில் ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது. கோடை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். 

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.  சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. காலை 7 மணியில் இருந்தே உஷ்ணம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் பகல் நேரங்களில் கானல் நீர் ஓடுகிறது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்து வருவதால் உறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  பல ஊர்களில் வெயில் சுட்டெரிக்கும் அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் மழையும் பெய்து குளுமை பரவி வருகிறது. அக்னி நட்சத்திர காலத்திற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதற்கு முன்னதாகவே அனலடிக்கப்போகிறது. வெப்ப அலை வீசக்கும் என்று எச்சரிக்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

இந்த சூழலில் தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்கும் என்றும், வெயில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்றும், வியாழக்கிழமை முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow