2024 Election: வரிசையில் நின்று வாக்களித்த சிவகார்த்திகேயன், வெற்றிமாறன்… பிரபலங்கள் அணிவகுப்பு!
நடிகர்கள் சிவகார்த்திகேயன், மைக் மோகன், சசிகுமார், கெளதம் கார்த்திக், காளி வெங்கட், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
 
                                சென்னை: அமரன் படத்தைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இன்று 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை அடுத்து சென்னையில் வாக்களித்தார் சிவகார்த்திகேயன். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு காலையிலேயே சென்ற சிவகார்த்திகேயன், அங்கு மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்தார். அதன்பின்னர் வாக்குச் சாவடிக்குச் சென்ற அவர், தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், மனசாட்சியுடன் வாக்களியுங்கள், விடுமுறை என வீட்டில் இருக்க வேண்டாம். இன்றைய  தினத்தில் வாக்களித்த பின் ஓய்வு எடுக்கலாம் எனக் கூறினார். அதேபோல், நடிகரும் இயக்குநருமான சசிகுமார் மதுரை புதுதாமரைப்பட்டி வாக்குசாவடியில் வாக்களித்தார். கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் வெள்ளிவிழா நாயகன் மைக் மோகனும் காலையிலேயே தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார். அதன்பின்னர் அவர் தூய்மைப் பணியாளர்களுடன் செஃல்பி எடுத்துக்கொண்டார். 
 
அதேபோல் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கெளதம் கார்த்திக், சென்னையில் வாக்களித்தார். இயக்குநர் வெற்றிமாறன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் ஓட்டுப் போட்டார். இவர்கள் தவிர திரைத்துறையைச் சேர்ந்த இன்னும் பல பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            