Garudan Box Office: பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் சூரி... கருடன் முதல் நாள் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம் நேற்று ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிரட்டியுள்ளது.
சென்னை: விடுதலையை தொடர்ந்து சூரி லீடிங் ரோலில் நடித்துள்ள திரைப்படம் கருடன். இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறன், துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் லீடிங் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதுவரை காமெடியனாக மட்டுமே வலம் வந்த சூரி, தற்போது ஹீரோவாகவும் மாஸ் காட்டி வருகிறார். அதன்படி அதிக எதிர்பார்ப்புடன் ரிலீஸான கருடன் படத்துக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் கில்லி போல சொல்லி அடித்துள்ளது சூரியின் கருடன்.
சொக்கனாக சூரி
கருடன் படத்தில் சொக்கன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சூரி. உன்னி முகுந்தனின் விசுவாசியாக வரும் சூரி, யதர்த்தமாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார் என்றால், ஆக்ஷனில் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் மிரட்டியுள்ளார். விடுதலையை விட கருடனில் சூரியின் நடிப்பு இன்னும் மெருகேறியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் இனி தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கலாம் என முடிவு செய்துவிட்டாராம் சூரி. இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. விடுதலை, கருடன் வரிசையில் கொட்டுகாளி, விடுதலை 2ம் பாகம் ஆகியவையும் விரைவில் வெளியாகவுள்ளன.
கருடன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், கருடன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று ஒருநாள் மட்டும் கருடன் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூரிக்கு இது தரமான ஓபனிங் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மினிமம் பட்ஜெட்டில் உருவான கருடன் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் சிறப்பான சம்பவமாக அமைந்துள்ளது. இதனால் வார இறுதியான இன்றும் நாளையும் கருடன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருடன் டிக்கெட் புக்கிங் நிலவரம்
கருடன் FDFS விமர்சனம் நன்றாக வந்துள்ளதால், நேற்று இரவு முதலே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்கான டிக்கெட் புக்கிங்கும் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கருடன் படத்துக்கு வரவேற்பு இருக்கும்பட்சத்தில் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ஏமாற்றம் கொடுத்த நிலையில், அரண்மனை 4, கருடன் இரண்டும் பாசிட்டிவான விமர்சனங்களுடன், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?