Hitler Trailer: பொலிட்டிக்கல் ஜானரில் ஆக்ஷன் மிரட்டல்... விஜய் ஆண்டனியின் ஹிட்லர் ட்ரைலர் வெளியானது!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Sep 19, 2024 - 00:12
Sep 19, 2024 - 00:24
Hitler Trailer: பொலிட்டிக்கல் ஜானரில் ஆக்ஷன் மிரட்டல்... விஜய் ஆண்டனியின் ஹிட்லர் ட்ரைலர் வெளியானது!
விஜய் ஆண்டனியின் ஹிட்லர் ட்ரைலர் வெளியானது

சென்னை: இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர், எடிட்டர் என சகலகலா வல்லவனாக மாஸ் காட்டி வருகிறார். ஹீரோவாக அறிமுகமான ஆரம்பத்தில் நான், சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து மிரட்டினார் விஜய் ஆண்டனி. இதனால் ரசிகர்கள் மத்தியில் விஜய் ஆண்டனியின் படங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை. 

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஹிட்லர் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க ரெடியாகிவிட்டார் விஜய் ஆண்டனி. சத்தமே இல்லாமல் சைலண்டாக உருவாகியுள்ள ஹிட்லர் படத்தை, தனா எஸ்.ஏ இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன் ரியா சுமன், கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் தமிழ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

ஹிட்லர் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ட்ரெய்லர், படத்துக்கும் எதிர்பார்ப்பு கொடுத்துள்ளது. பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட்லர் படத்தில் ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார் விஜய் ஆண்டனி. இன்னொரு பக்கம் ரியா சுமன் உடனான காதல் காட்சிகளிலும், ரெடின் கிங்ஸ்லி உடன் காமெடியிலும் கலங்கடித்துள்ளார் விஜய் ஆண்டனி. 

அதேபோல், கவுதம் மேனன், இயக்குநர் தமிழ் ஆகியோரும் ஹிட்லர் படத்தின் ட்ரைலரில் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனிக்கு கம்பேக் கொடுக்கும் விதமாக ஹிட்லர் மூவி இருக்கும் என எதிர்பார்க்கலாம். வரும் 27ம் தேதி டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவாரா திரைப்படமும் வெளியாகிறது. தேவாராவுக்குப் போட்டியாக களமிறங்கும் ஹிட்லர், கோலிவுட் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow