கண் திறந்து பார்த்த அம்மன்... பரவிய செய்தியால் பரவசமான பக்தர்கள்! எங்கே தெரியுமா?

Feb 22, 2024 - 12:49
கண் திறந்து பார்த்த அம்மன்... பரவிய செய்தியால் பரவசமான பக்தர்கள்! எங்கே தெரியுமா?

நெல்லை அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அம்மன் சிலை கண் திறந்ததாக கூறப்பட்டதால் அங்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் தை மாதம் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகம் நிறைவு பெற்ற நிலையில் வழக்கம்போல் அர்ச்சகர் தர்மராஜன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அம்மன் சிலை திடீரென கண் திறந்து பார்த்ததாக தமக்கு தோன்றியதை அங்கிருந்த பக்தர்களிடம் தெரிவித்தார். 

இதையடுத்து கோயில் அருகே திரண்டிருந்த பொதுமக்களும், பக்தர்களும் அம்மன் கண் திறந்த காட்சியை பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். பெண்கள் அங்கேயே குலவையிட்டு வழிபாடு நடத்தினர்.

மேலும் படிக்க :

https://kumudam.com/Atrocity-by-boat-engine-tearing-the-net---Rs.-30-lakh-loss...-Tamil-Nadu-fishermen-are-chased-away...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow