சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துக... வேதாந்தா நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் அறிவுரை!
தூத்துக்குடி மக்களின் ஆழ்ந்த கவலையை புறந்தள்ள முடியாது எனக்கூறி நிபுணர் குழு பரிந்துரைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை மறுதிறப்புக்கும் முன்பாகவே ஸ்டெர்லைட் ஆலை செயல்படுத்த வேண்டுமென வேதாந்தா நிறுவனத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டுமென வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி மக்களின் கவலைகளை கவனிக்காமல் இருக்க முடியாது எனவும், குரலற்ற அம்மக்களால் நீதிமன்றம் வரை செல்ல முடியாது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது எனவும் எதிர்காலத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டால் நீதிமன்றமே அதற்கு தார்மீகப் பொறுப்பு எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது. மூடப்பட்ட ஆலையை ஆய்வு செய்யவும், பசுமை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் நிபுணர் குழு பரிந்துரைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை ஆலை திறப்புக்கு முன்பாக செயல்படுத்த வேண்டுமென வேதாந்தா நிறுவனத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும் படிக்க :
What's Your Reaction?