ஜெட் வேகத்தில் தங்கம், வெள்ளி: சவரன் ரூ 800 உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம், வெள்ளி ஆகிய நாளுக்கு நாள் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாலை மேலும் ரூ 800 சவரனுக்கு தங்கம் உயர்ந்துள்ளது. அதே போன்று வெள்ளியும் கிலோ ரூ 6 ஆயிரம் உயர்ந்துள்ள நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி இன்றும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதைபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254-க்கும், கிலோவுக்கு ரூ.9,000-ம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய தினம் காலை தங்கம் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து, கிராம் ரூ 13 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒருசவரன் தங்கம் ரூ 1,04,000 ஆக உயர்ந்துள்ளது.
இதே போன்று வெள்ளியும் இன்று கிலோவிற்கு ரூ 20ஆயிரம் உயர்ந்துள்ளது. கிராம்வெள்ளி ரூ 274 க்கு ஆக உள்ளது. ஒருகிலோ வெள்ளி 2,74,000 மாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மாலையில் மீண்டும் தங்கம் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்தது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 13,100 விற்பனை ஆனது. சவரன் 1,04,800 விற்பனை ஆனது. இதே போன்று வெள்ளியும் மாலையில் கிலோவிற்கு ரூ 6 ஆயிரம் உயர்ந்தது. கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.283 விற்பனை ஆகிறது. கிலோ வெள்ளி ரூ. 2,80,000 ஆக விலை உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி போட்டி போட்டுக் கொண்டு விலை ஏறி வருவதால் நகைப் பிரியர்கள், முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
What's Your Reaction?

