தங்கம் வாங்க சரியான நேரம் வந்துவிட்டது...அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து, நகை வாங்கும் மக்கள் அனைவரும் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்களாகவே இறக்கத்தை கண்டு வரும் நிலையில், இன்றும் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்றும் (அக்.,-14) சவரனுக்கு ரூ 760 குறைந்து ஒரு சவரன் ரூ 1,08,720க்கும், கிராமுக்கு ரூ 95 குறைந்து ஒரு கிராம் ரூ 13,590க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்களாகவே குறைந்து வந்த நிலையில், இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 குறைந்து ஒரு சவரன் ரூ 1,08,120க்கும், கிராமுக்கு ரூ 75 குறைந்து ஒரு கிராம் ரூ 13,515க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு 5000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

