தியேட்டரில் தெறிக்கும் ‘ஜெயிலர் 2’....தலைவர் தரிசனத்துக்கு திரண்ட பிரபலங்கள்!
இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தை காண்பதற்கு சென்னை திரையரங்கிற்கு லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ், அனிரூத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு உருவாகி வெளியான ”ஜெயிலர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, வசந்த் ரவி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம், இன்று (அக்டோபர் 15) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் திரைப்பிரபலங்கள்:
தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையிடப்பட்டது.
மேலும், நடிகர் தனுஷும் அதே திரையரங்கிற்கு வருகை தந்து 'ஜெயிலர் 2' திரைப்படத்தைப் பார்த்தார். இதனால் ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது.
மேலும் ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?

