நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு

வார தொடக்க நாளே நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. 

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு
தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு

அட்சய திருதி அடுத்த வாரம் 19-ம் தேதி வர உள்ளது. இதனிடையே தங்க நகைகளை வாங்க மக்கள் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் தங்கத்தின் விலை ஏற்றமாக, இறக்கமாக மாறி மாறி விற்பனை ஆகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர். 

கடந்த வாரம் சனிக்கிழமை  சவரனுக்கு ரூ 200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,100 விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் விலை ரூ.260 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை முதலீட்டாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow