காதலிக்கு மெர்சிடிஸ் பரிசு அளித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலிக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்து இருக்கிறார்.

காதலிக்கு மெர்சிடிஸ் பரிசு அளித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
காதலிக்கு மெர்சிடிஸ் பரிசு அளித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு சொகுசு காரை வாங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு 'பெராரி 12 சிலிண்ட்ரி' காரை வாங்கிய அவர், தற்போது தனது தோழி மஹேகா ஷர்மாவிற்கு 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் வி-கிளாஸ் (Mercedes V-Class) காரை பரிசாக வழங்கியுள்ளார்.

ஆட்டோ ஹேங்கர் (Auto Hangar) கார் நிறுவனம், "இந்தியாவின் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் காரை ஹர்திக் பாண்டியா மற்றும் மஹேகா ஷர்மாவிற்கு டெலிவரி செய்வதில் பெருமை கொள்கிறோம்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் கார் சேகரிப்பில் பெராரி, லம்போகினி போன்ற வேகம் கொண்ட கார்கள் பல இருந்தாலும், இந்த புதிய மெர்சிடிஸ் கார் வசதி மற்றும் சொகுசு பயணத்திற்காக வாங்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியாவின் பிரம்மாண்ட கார் சேகரிப்பு ஹர்திக் பாண்டியா ஏற்கனவே பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வைத்துள்ளார். அவரது கார் சேகரிப்பில் உள்ள சில முக்கிய கார்கள்: லம்போகினி ஹுராகன் ஈவோ (Lamborghini Huracán EVO): இதன் விலை சுமார் 3 முதல் 4 கோடி ரூபாய். பெராரி 12 சிலிண்ட்ரி (Ferrari 12Cilindri): இது அவரது கலெக்ஷனில் மிக முக்கியமான கார்.

மேலும் அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், லம்போகினி உருஸ், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 மற்றும் ரேஞ்ச் ரோவர் போன்ற விலையுயர்ந்த கார்களும் உள்ளன.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow