தவறவிட்ட பர்ஸினை நேர்மையாக ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்கள்-காவல்துறை பாராட்டு

தவறவிட்ட நபரின் விலாசத்தை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

Jan 3, 2024 - 20:49
தவறவிட்ட பர்ஸினை நேர்மையாக ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்கள்-காவல்துறை பாராட்டு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தவறவிட்ட மணி பர்ஸினை நேர்மையாக போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைத்த இரு அரசு பள்ளி மாணவர்களின் செயலை காவல்துறையினர் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் பிரேம்குமார் இருவரும் மூங்கில் மண்டபம் பகுதியில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வருகின்றனர்.இந்நிலையில் வழக்கம்போல் இன்று தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு பேருந்து மூலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து நடை பயணமாக பள்ளிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போது ஆற்காடு நாராயாண சாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கீழே மணி பர்ஸ் ஒன்று கிடைத்துள்ளது. 

இதனை யுவராஜ் மற்றும் பிரேம்குமார் எடுத்து வந்து மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் ராஜுவிடம் சம்பவம் குறித்து விளக்கி பர்ஸினை ஒப்படைத்துள்ளனர்.போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அந்த பர்ஸினை ஆய்வு செய்தபோது காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் திருவள்ளூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பதும் பெரிய வந்தது. அதில் மூன்று ஏடிஎம் கார்டுகள், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம்,போட்டோக்கள் உள்ளிட்டவை அந்த பர்ஸில் இருந்தன.

மேலும் பள்ளி மாணவர்களின் இந்த சேவையை காவல்துறை மட்டுமல்லாது அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அந்த இரு மாணவரை வெகுவாக பாராட்டினர்.தவறவிட்ட நபரின் விலாசத்தை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்கள் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றன குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், இந்த இரு மாணவர்களின் நேர்மையான செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow