ஆவடியன்ஸ்க்கு இனி ஜாலி தான்..! கோயம்பேடு-ஆவடி மெட்ரோ.. தயாரான ப்ளான்..! டெண்டர் விட்ட சென்னை மெட்ரோ..
சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரெயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரெயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் மெட்ரோ ரெயில் பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் மெட்ரோ ரெயிலில் எளிமையாக பயணம் செய்ய முடிவதால் மக்கள் அதிக அளவில் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துகின்றனர். இதனால், சென்னை புறநகர் பகுதிகளை மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப் பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயம்பேடு-ஆவடி வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் மற்றும் சிறுசேரி-கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
இதன்படி, வழித்தடம் ஐந்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடத்தை நீட்டிப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க :
https://kumudam.com/Only-65-more-days..-They-will-end-the-anti-Hindu-regime..-Upset-H.-Raja..
What's Your Reaction?