Hanuman OTT Release: ஒருவழியாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து… ஓடிடியில் வெளியாகும் ஹனுமான்!
கடந்த ஜனவரி மாதம் வெளியான ஹனுமான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது உறுதியாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் ஹனுமான். தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. அதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்த குண்டூர் காரம், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஹனுமான் ஆகிய படங்கள் ரிலீஸாகின. இதில் அயலான், கேப்டன் மில்லர், குண்டூர் காரம் படங்களுக்கு மட்டுமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்த மூன்று படங்களும் பெரியளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.
அதேநேரம் ஆர்ப்பாட்டாமே இல்லாமல் ரிலீஸான ஹனுமான் அதிரி புதிரியாக ஹிட் அடித்தது. முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சிகளில் கிராபிக்ஸில் மிரட்டிய ஹனுமான் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் அயலான், கேப்டன் மில்லர், குண்டூர் காரம் படங்களை ஓவர்டேக் செய்தது ஹனுமான். தமிழ் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் 330 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இதனையடுத்து ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் ஹனுமான் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே சென்றது. இரண்டு, மூன்று முறை ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் சொன்னபடி ரிலீஸாகவில்லை. அதேநேரம் ஹனுமான் தெலுங்கு வெர்ஷன் மட்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஹனுமான் ஓடிடியில் வெளியாகிறது.
அதன்படி இந்தப் படம் வரும் 5ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள ஹனுமான் படத்துக்கு சவுத் இண்டியன் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாத் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹனுமான் படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?