"படிப்பு முக்கியம் சிதம்பரம்"..கட்டாய கல்வி.. 25% இடஒதுகீடுக்கான விண்ணப்பம்.. பெற்றோர்களே ரெடியா?

தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Apr 2, 2024 - 11:32
"படிப்பு முக்கியம் சிதம்பரம்"..கட்டாய கல்வி..  25% இடஒதுகீடுக்கான விண்ணப்பம்.. பெற்றோர்களே ரெடியா?

இந்திய அரசியலமைப்பு சட்டம் 2002-ல் 14வயதுக்குள் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கு கட்டாய கல்வியை அடிப்படை உரிமையாக வழங்குவதற்காக, இந்திய அரசியலமைப்பில் பிரிவு 21A சேர்க்கப்பட்டு, கல்வி உரிமைச்சட்டம் RTE 2009 அறிமுகம் செய்யப்பட்டது. 

இதன் மூலம் சமூகத்திலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கான கல்விகட்டணம் முழுவதையும் அரசே ஏற்று வருகிறது. இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடம் தமிழகத்தில் உள்ள 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 85ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வியை பெற்று வருகின்றனர். 

இந்த வழியில் மாணவர்கள் சேர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள், உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். அதன்படி இந்தாண்டுக்கான விண்ணப்பம் வருகிற 22ஆம் தேதி துவங்கி, அடுத்த மாதம்(மே) 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25% இடஒதுக்கீட்டிற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின், குலுக்கல் முறையில்  மாணவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையும்  உள்ளது. அதன்கீழ் மே 28ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்தப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow