அதிகரிக்கும் AI பயன்பாடு.. எந்த மாதிரியான வேலைக்கு ஆபத்து?

அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் காரணமாக இந்தியாவில் ‘white collar workplace' என்று அழைக்கப்படும் சில துறைகளில் பணி நீக்கம் இனி அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் AI பயன்பாடு.. எந்த மாதிரியான வேலைக்கு ஆபத்து?
ai growing impact maybe these kind of jobs are at risk

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்தது டெக் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பணி நீக்கத்திற்கு ஒரு வகையில் AI-க்கும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக, பாதுகாப்பான வேலை என கருதப்பட்டு வந்த சில வேலைகள் தான் AI-யின் அபரிமிதமான வளர்ச்சியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

உலக பொருளாதார மன்றத்தின் (world economic forum) கூற்றுப்படி இன்று மனிதர்களால் மேற்கொள்ளப்படும் 22% வேலைகள் 2030-க்குள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 8 சதவீத பணியாளர்கள் (92 மில்லியன்) தங்களது வேலையினை இழக்கலாம். அதே நேரத்தில் 14 சதவீதம் (170 மில்லியன்) புதிய வேலைகள் உருவாகலாம்.

எந்த மாதிரியான வேலைகளுக்கு ஆபத்து அதிகம் என பார்த்தால், திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய மற்றும் கணிக்கக்கூடிய விதமான வேலைகளுக்கு தான் தற்போதைய AI தொழில்நுட்பத்தால் அதிக ஆபத்து உள்ளது என கூறப்படுகிறது. மனிதர்கள் மூலம் தற்போது நடைப்பெற்று வரும் சில வேலைகள், AI மூலம் ஆட்டோமெட்டிக் முறையாக மாற்றப்படும்.

பொதுவாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் புதிய பட்டதாரிகள் கீழ்மட்டத்தில் தொடங்கி கடின உழைப்பு மற்றும் தங்களின் அனுபவத்தின் வாயிலாக உயர் நிலையினை அடைவார்கள். ஆனால், தற்போது பல ஆரம்ப நிலை பணிகள் ஏஐ மூலம் ஆட்டோமெட்டிக் முறையில் மேற்கொள்ளப்படுவதால் இளம் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம்.

65 சதவீத சில்லறை மற்றும் இ-காமர்ஸ் துறையின் பணியிடங்கள் மற்றும் 70 சதவீத நிதித்துறை தொடர்பான பணியிடங்கள் ஏஐ மூலம் இனி வருங்காலத்தில் ஆட்டோமெட்டிக் செய்யப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 30 சதவீத கஷ்டமர் சர்வீஸ் பணியிடங்கள் ஏற்கெனவே ஆட்டோமெட்டிக் முறைக்கு மாறியுள்ளன.

அபாயத்தில் உள்ள சில வேலைகளின் பட்டியல்

நிதி மற்றும் கணக்கியல் துறை:

* தரவு உள்ளீடு மற்றும் செயலாக்கம் (Date entry and processing)
* மோசடி கண்டறிதல் மற்றும் கணிப்பு (Fradu detection & forecasting)
* சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை தணிக்கைகள் (statutory and regulatory audits)

தணிக்கைத்துறை:

*  ஜூனியர் ஆடிட்டர்
* ஆவண சரிபார்ப்பு (Document Validation)
* தரவு பகுப்பாய்வு மற்றும் அறிக்கைகள் (Data analysis and Reports)

காப்பீட்டுத்துறை: (Insurance)

* கொள்கை நிலை (policy status and back end)
* கோரிக்கைகளைச் செயலாக்குதல் (claim processing)
* காப்பீடு வழங்குபவர்கள் (underwriting assistants)

சந்தைப்படுத்துதல் (marketting)

* சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள்(social media and digital ads)
* விளம்பர உள்ளடக்கம் எழுதுதல் (ad copy writers)
* பிரச்சார திட்டமிடல் (campaign scheduling)
* உள்ளடக்க உதவியாளர்கள் (content assistants)
* SEO எழுத்தாளார் (SEO content assistants)

பயனர் சேவைகள்: (customer service/BPO)

*  கஷ்டமர் சேவை மையம் (Chat support and service queries)
*  டெலிகாலர்ஸ் (Call support executives)

சில்லறை மற்றும் இ-காமர்ஸ்: (Retail and ecommerce)

* சரக்கு மேலாண்மை (Inventory management)
* ஆர்டர் பில்லிங் சப்போர்ட் (POS billing support staff)

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி ஒரு யதார்த்தம் என்றாலும், அது மனித நுண்ணறிவுக்கு ஒரு மாற்று அல்ல என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். அதே நேரத்தில் காலத்திற்கேற்ப தங்களது திறமையினை வளர்த்துக் கொள்வது அவசியம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow