மீண்டும் தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.1040 உயர்வு, நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 

காலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து இருந்தது. மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

மீண்டும் தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.1040 உயர்வு, நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 
சவரனுக்கு ரூ.1040 உயர்வு, நகைப்பிரியர்கள் அதிர்ச்சி 

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக தங்கம் விலை ஒருநாளில் ஆயிரக்கணக்கில் வித்தியாசம் ஏற்படுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து ரூ. 1,14,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ரூ. 1,12,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 14,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளியில் விலை ரூ. 300-கீழ் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சி மாலை வரை நீடிக்கவில்லை. தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்வு. கிராமுக்கு ரூ.560 உயர்ந்து  ஒரு கிராம் ரூ.14,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,14,000 -க்கும் விற்பனை ஆகிறது.  வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow