வார தொடக்கத்தில் அதிர்ச்சி செய்தி : தங்கம் சவரன் ரூ. 640 உயர்வு : வெள்ளி கிலோ ரூ 8 ஆயிரம் ஏற்றம்
வார தொடக்க நாளான திங்கட்கிழமை நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இன்றும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையானது. அதே நேரம் மாலையில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.1,00,800 விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்க ரூ.80 அதிகரித்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.257க்கும் ஒரு கிலோ ரூ.2.57 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
வார தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ 8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 2,65,000 விற்பனை ஆகிறது. வார தொடக்க நாளில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் முதலீட்டாளர்களுக்க அதிர்ச்சி அளித்துள்ளது.
What's Your Reaction?

