ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்: சபரிமலையில் விரைவில் 'ரோப்கார்' வசதி 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரோப்கார் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 80 மரங்கள் வெட்டுவது தொடர்பாக , 'ட்ரோன்' மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்: சபரிமலையில் விரைவில் 'ரோப்கார்' வசதி 
'Ropecar' facility to be available soon in Sabarimala

பம்பையில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் மலை மீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வது மிகவும் சிரமம் ஆகும். துவக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், தற்போது டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் யாத்திரை செல்லும் ஐப்ப பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், 'ரோப்கார்' போக்குவரத்து சேவை அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து பலகட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.

பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கி.மீ., துாரத்திற்கு 271 கோடி ரூபாய் செலவில், ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. காட்டின் உட்பகுதியில் மொத்தம் ஐந்து துாண்கள் அமைக்கப்பட உள்ளது. 

கேரள உயர் நீதிமன்ற அனுமதியுடன், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி மொத்தம், 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும். இன்று, வனவிலங்கு சரணாலய வாரியத்தின் கூட்டம் நடக்கிறது. இதில் முடிவு எடுக்கப்படும்.

 'பெருவழி பாதையை தவிர்க்கவும்' சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை எதிர்கொள்வது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. 

 கூட்டத்திற்குப்பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும். நிலக்கல் - பம்பை வழியாக வர வேண்டும். பெருவழிப் பாதை, புல்மேடு பாதையில் மீட்பு, மருத்துவ வசதி செய்வதில் சிரமங்கள் உள்ளன. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow