நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி : தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு
தங்கத்தின் விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் சற்றே ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் சர்வதேச சந்தையின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகிறது. தொடர் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 9) சவரனுக்கு ரூ. 320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,040-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 96,000-க்கும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது.
What's Your Reaction?

