பட்டுக்கோட்டை காருடைய அய்யனார் கோயில் தேரோட்டம்... தப்பாட்டம் ஆடி.. கும்மியடித்து வழிபட்ட பக்தர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காருடைய அய்யனார் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Apr 26, 2024 - 10:34
பட்டுக்கோட்டை காருடைய அய்யனார் கோயில் தேரோட்டம்...  தப்பாட்டம் ஆடி.. கும்மியடித்து வழிபட்ட பக்தர்கள்

பட்டுக்கோட்டை அடுத்த ஆலத்தூரில் அருள்மிகு ஸ்ரீ காருடைய அய்யனார் கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும்,  சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 


திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (ஏப்ரல் 25) மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், நாதஸ்வரம், மேளம் முழங்க ஆண்களுக்கு இணையாக பெண்களின் தப்பாட்டம் விண்ணை அதிரவைத்தது. மேலும், பெண்கள் கும்மியடித்து  பாடல் பாடியும் அய்யனாரை வழிபட்டனர். 


ஆடி அசைந்து வீதி உலா வந்த திருத்தேரினை திரளான பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow