சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
நேற்று அம்பத்தூர் மற்றும் வானகரத்தில் 13 சென்டிமீட்டர், மலர் காலணியில் 12 சென்டிமீட்டர் என்று அளவில் மிக கன மழை பெய்துள்ளது. மேலும் மணலி மற்றும் அம்பத்தூரில் 10 செ.மீ மழையும், கேகே நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 சென்டிமீட்டர் மழையும், கொளத்தூர் கோடம்பாக்கம், புழலில் 8 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
ராயபுரம், திருவொற்றியூர், பனப்பாக்கம், ஐஸ் ஹவுஸ், மாதவரம், ஆலந்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், மதுரவாயில் மற்றும் சோழிங்கநல்லூரில் 6 சென்டிமீட்டர் என்ற அளவில் கன மழை பெய்துள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் என்று அளவில் கனமழை பெய்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் 34 விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மழைக்காரணமாக சென்னையில் தரையிரங்க வேண்டிய விமானங்கள், பெங்களூருக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது.