இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் நடந்த சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்!

சென்னை மெரினா கடற்கரையில் மெய்சிலிர்க்கும் வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை லட்சக் கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

Oct 6, 2024 - 15:14
இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் நடந்த சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்!

சென்னை மெரினா கடற்கரையில் மெய்சிலிர்க்கும் வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை லட்சக் கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை காண  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக் கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். 

நிகழ்ச்சியின் துவக்கமாக பாராசூட்டில் இருந்து குதித்து ஆகாய கங்கை குழு சாகசம் செய்தது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கமாண்டோக்கள் இறங்கி பணையை கைதிகளை மீட்பது குறித்து தத்ரூவமாக நடித்துக்காட்டினர்.அதன்பின் விமானத்தில் இருந்து தேசிய கொடி மற்றும் ஆகாய கங்கை குழு கொடி வண்ணத்திலான பாராசூட் வீரர்கள் வானில் இருந்து தரையிறங்கினர்.

அதனைத் தொடர்ந்து விமானப்படையின் சேட்டக் ஹெலிகாப்டர்கள் திவாஜ் குழு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பிற்கு துவாஜ் என பெயரிடப்பட்டது. விமானப்படையின் 4 சேட்டக் ஹெலிகாப்டர்கள் தலைகீழ் ஒய் வடிவில் சாகசம் செய்தன. "புயல்" குழுவின் ரபேல் விமானம் அதிவேகமாக சென்று மிரட்டியது. டக்கோட்டா ரக விமானத்தின் "சேரா" குழு சாகசம் செய்தது.

இந்திய விமானப்படையின் முக்கிய பங்கு வகித்த பழமையான ஹர்வார்டு ரக விமானத்தில் "பல்லவா" குழு சாகசம் விமானப்படையின் பயிற்சி  விமானமான ஹெச்.டி.டி-40 "கலாம்" குழுவினர் வானில் சாகசம் செய்தனர்

விமானப்படையின் சி-295 மற்றும் இரு டோர்னியர் 228 விமானங்கள் குறைந்த உயரத்தில் பறந்தன."காஞ்சி" என பெயரிடப்பட்ட சாகசத்தில் வான்வழி முன்னறிவிப்பு விமானம், மிக்-29 சாகசம் செய்தது

விமான சாகசத்தில் பங்கேற்ற விமானங்கள் வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்ததனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 இலகு ரக தேஜஸ் விமானங்கள் வானில் அணிவகுத்தன. இந்த அணிவகுப்பிற்கு "கார்த்திக்கேயா" என பெயரிடப்பட்டுள்ளது.

அனைத்து வானியல் சூழ்நிலைகளிலும் போர் செய்யும் திறன் மற்றும் தாக்கப்படுவதை எதிரிகள் உணர்வதற்கு முன்பாகவே தாக்குதலை நிகழ்த்தும் திறன்கொண்ட சுகோய்-30 எம்.கே.ஐ விமானங்கள் வானில் அணிவகுத்தன. இதற்கு "மெரினா" என பெயரிடப்பட்டது. பி-8ஐ, ரஃபேல் விமானங்கள் அணிவகுத்தனர். இதற்கு "தனுஷ்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் தாக்குதல் விமானங்களின் இதயமாக கருதப்படும் ஜாகுவார் விமானங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு நீலகிரி என பெயரிடப்பட்டது

சாரங் வான் சாகச குழுவினரின் எம்.ஐ.-1 ரக ஹெலிகாப்டர்கள்  பல்வேறு வடிவங்களில் பறந்து வானில் ஜாலம் நிகழ்த்தின.மிக நெருக்கமான தூரத்தில் பறந்தும், ஹாட் வடிவில் புகையை கக்கியபடியும் பறந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சி-17 விமானத்தை சூர்யகிரண் குழுவின் விமானங்கள் பின் தொடர்ந்தும், அதிக எடை சுமக்கும் போர் விமானமான  சி-17 வானில் குறுகிய உயரத்தில் வட்டமிட்டு அசத்தியது.

வானில் மூவர்ண புகையால் தேசியக் கொடியை உருவாக்கி சூர்யகிரண் வான் சாகச குழுவினர் வர்ணஜாலம் காட்டியதோடு, மிக நெருக்கமான தொலைவில் ஒன்றொரு ஒன்று மோதுவது போல் பறந்து பார்வையாளர்களை திகிலூட்டினர்.

உலகில் அதிக மக்கள் பார்வையிட்ட சாகச நிகழ்ச்சி என்ற பதிவுக்காக ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் படம் பிடிக்கப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow