மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.18.62 லட்சம் கையாடல்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 7 பேர் மீது வழக்குப்பதிவு

Dec 7, 2023 - 12:19
Dec 7, 2023 - 15:12
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.18.62 லட்சம் கையாடல்

சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.18.62 லட்சத்தை கையாடல் செய்த வாகன உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாகன உதவியாளராக இருந்தவர் வினோத் வில்பர்ட் (34). ஒப்பந்த பணியாளரான இவர் பட்டப்படிப்பு மற்றும் கணினி படிப்பு முடித்து இருந்தால், கணினி உதவியாளராகவும் பணிபுரிந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 2022 வரையிலான காலக்கட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையில்  ரூ.18.62 லட்சத்தை கையாடல் செய்துள்ளார்.
மேலும்  கையாடல் செய்த தொகையை தனது மனைவி மாங்கனி மற்றும் 5 நண்பர்களின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து அவரை கடந்த 2022-ம் ஆண்டு பணிநீக்கம் செய்துள்ளனர்.இந்நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 7 பேர் மீது வழக்கு பதிந்து வினோத் வில்பர்டை கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow