டிச.15, 16ஆம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டம்

பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தாக்கல் செய்தார்

Dec 7, 2023 - 12:06
Dec 7, 2023 - 15:11
டிச.15, 16ஆம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டம்

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட பார்முலா 4 கார் பந்தயம் டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக ஃபார்முலா 4 கார் பந்தய போட்டி தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது.

சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் சென்னை வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். 

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த கார் பந்தயத்தை மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக கார் பந்தயம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதை டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பந்தயத்தை நடத்துவதற்கான சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தாக்கல் செய்தார்.இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (டிசம்பர் 11) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow