பாலியல் வன்கொடுமை வழக்கு- மரண தண்டனை ஆயுள் தண்டனையானது

தாய்க்கு ஆறு மாதங்கள் தண்டனை விதித்துடன்,அவர் ஏற்கனவே சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டனர்.

Nov 23, 2023 - 11:19
Nov 23, 2023 - 12:21
பாலியல் வன்கொடுமை வழக்கு-   மரண தண்டனை ஆயுள் தண்டனையானது

மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு விதிக்கபபட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தைக்கு மரண தண்டனையும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, சிறுமியின் தந்தை கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு அல்ல எனக்கூறி, தந்தைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தனர்.

சிறுமியின் தாய் குற்றத்துக்கு உடந்தையாக இல்லை என்பது  சாட்சியங்களில் இருந்து தெரிவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள் ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், அவருக்கு ஒரு பிரிவின் கீழ் மட்டும் ஆறு மாதங்கள் தண்டனை விதித்துடன்,அவர் ஏற்கனவே சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு தாயை  விடுதலை செய்தும் உத்தரவிட்டனர்.

சிறுமியை பரிசோதித்த சென்னையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர், இரு விரல் சோதனை நடத்தியுள்ளது ஆதாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளதை சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இரு விரல் சோதனை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சோதனையை நடத்தும் மருத்துவர்கள் தவறான நடத்தை குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர் எனவும் எச்சரித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow