கண்டுக்காமல் எப்படி போகலாம்?.. திமுக கவுன்சிலர் செய்த வம்பு.. தெறித்து ஓடிய தென்காசி வேட்பாளர் !
வாக்காள பெருமக்களே என ராணி வாகனத்தின் முன்புறம் பேச தொடங்க, வாகனத்தின் பின்புறம் வந்த திமுகவின் ஒரு தரப்புக்கும், கவுன்சிலர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தென்காசியில் நாடாளுமன்ற வேட்பாளர் பிரசாரம் செய்ய வந்த போது, திமுகவினரின் இருதரப்புக்குள் நிகழ்ந்த குளறுபடி கைகலப்பால், எம்பி வேட்பாளர் பதறி ஓடிய சம்பவம் நிகந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீ குமார் வாக்கு சேகரிக்க சென்று கொண்டிருந்தார். அதேசமயத்தில், ஒன்றிய கவுன்சிலர் முத்து பாண்டியனின் தலைமையில் அப்பகுதி திமுகவினர் இணைந்து திரளான பொதுமக்களை திரட்டி வரவேற்பு கொடுக்க காத்திருந்தனர். ஆனால், பிரசாரத்திற்கு வந்த திமுக வேட்பாளரின் வாகனம் அங்கு இருப்பவர்களை கண்டு கொள்ளாமல் தாண்டி சென்றதாக தெரிகிறது.
இதனால் கடுப்பான ஒன்றிய கவுன்சிலர் தரப்பை சேர்ந்தவர்கள் பிரசார வாகனத்தை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எதுவும் நடக்காதது போல, வாக்காள பெருமக்களே என ராணி வாகனத்தின் முன்புறம் பேச தொடங்க, வாகனத்தின் பின்புறம் வந்த திமுக கவுன்சிலர் அருணாச்சல் பாண்டியனின் தரப்புக்கும், கவுன்சிலர் முத்து பாண்டி தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இந்த சச்சரவை இப்படியே விட்டால்.. இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும் என வேட்பாளர் ராணி அங்கிருந்து ஜெட் வேகத்தில் புறப்பட்டு சென்றார் இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பானது.
What's Your Reaction?