சென்னையில் மோடி ரோடு ஷோ.. தி. நகரில் நாளை போக்குவரத்து மாற்றம்.. எந்த பகுதிக்கு எப்படி செல்வது?

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை தி.நகரில் நாளைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3.00 மணி முதல் 8.00 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Apr 8, 2024 - 18:05
சென்னையில் மோடி ரோடு ஷோ.. தி. நகரில் நாளை போக்குவரத்து மாற்றம்.. எந்த பகுதிக்கு எப்படி செல்வது?

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னை வருகிறார் பிரதமர் மோடி. தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து நாளை மாலை 6.30 மணி அளவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

சென்னை தி. நகர் பாண்டி பஜாரில் நடைபெறும் ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரோடு ஷோ நடைபெறும் பனகல் பார்க் தொடங்கி தேனாம்பேட்டை சிக்னல் வரைக்கும் பாண்டி பஜார் சாலையின் இருபுறமும் பிரதமர் நரேந்திர மோடியை  நின்று பார்க்கும் வகையில் சாலையின் இருங்கிலும் பேரிகார்டுகள் அமைக்கும் பணிகளை  மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களில் உள்ள கிளைகளை அகற்றியும் கேபிள் ஒயர்களை அகற்றியும் பாதுகாப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ரோடு ஷோ நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை. சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை. அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாவை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் 3.00 மணி முதல் 8.00 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிற்பகல் 3. 00 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும்.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாறை நோக்கி செல்லும் வாகனங்கள். மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள். CIPET யில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள். வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள். CPTயில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும்
வாகனங்கள் டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள். அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்.
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow