மகளிருக்கு மாதம் ரூ.3,000... மதம் மாறிய கிறிஸ்துவ, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு... பாமகவின் கவர்ச்சி தேர்தல் அறிக்கை...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாமக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சமூக நீதி, மாநில தன்னாட்சி, அணு உலை இல்லா தமிழகம், நதிகள் இணைப்புத் திட்டம், குழந்தைகளுக்கான நீதி என, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது பாமக. மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகை மாதம் ரூ.3,000-ஆக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு, கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்துதல் போன்ற பொதுவான அனைத்து கட்சிகளும் அறிவிக்கும் திட்டங்களையும் பாமக அறிவித்துள்ளது.
*உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க நடவடிக்கை...
*கல்வி வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும்... *அவர்களை தனிப்பிரிவாக்கி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை போன்றவை, சமூக நீதி என்ற தலைப்பின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது...
*மத்திய அரசின் வரி வருவாயில் 50%-த்தை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை...
*மாநில அரசின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவில் 50%-த்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தல்...
*ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை...
*அனைத்து விளை பொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய புதிய ஆணையம், 60 வயதை கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்...
*என்.எல்.சி 3-வது சுரங்கம் மற்றும் முதல், 2-ம் சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு தடை... *என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற நடவடிக்கை..
*தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 லட்சம் புதிய பணியிடங்கள்...
*வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை...
*மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்...
*ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்..
*சென்னையில் ரூ.1,000 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்...
*மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை...
*போதைப் பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை...
*புகையிலைப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனையை குறைக்கும் நடவடிக்கை என பல்வேறு அறிப்புகளை வெளியிட்டுள்ளது பாமக.
What's Your Reaction?