ஐ.பி.எல் 2024: "ஆர்.சி.பி ஹாட்ரிக் வெற்றி" - ப்ளே ஆஃப் போக சான்ஸ் இருக்கா..?

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி பெங்களுரூ அணி அதிரடி வெற்றிப்பெற்றுள்ளது.  இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அந்த அணி ப்ளே ஆஃப் போகுமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

May 5, 2024 - 08:53
ஐ.பி.எல் 2024: "ஆர்.சி.பி ஹாட்ரிக் வெற்றி" - ப்ளே ஆஃப் போக சான்ஸ் இருக்கா..?

கோலாகலமாக நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் போட்டியில், நேற்று (மே4) பெங்களுரூ குஜராத் அணிகள் பெங்களுரூ சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் ஓபனர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். 

தொடர்ந்து ஷாருக்கானும், டேவிட் மில்லரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல ஸ்கோரை கட்டமைத்து வந்த நிலையில், கோலியின் அற்புதமான த்ரோவில் ஷாருக்கான் ரன் -அவுட்டானார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் நிலைத்து ஆடாததால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த குஜராத் அணி முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்த சீசனில் மிக மோசமான பந்துவீச்சுக்கு விமர்சிக்கப்பட்டு வந்த ஆர்.சி.பி அணி நேற்றையை (மே 4) போட்டியில் சிறந்த பவுளிங் அட்டாக்கை வெளிப்படுத்தியது. அடுத்ததாக இறங்கிய, பெங்களுரூ அணியின் ஓபனர்கள் கோலியும்,  கேப்டன் பாஃப் டூ ப்ளசியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பாஃப் வெறும் 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்தது அணியை வெற்றிப்பாதைக்கு எளிதாக அழைத்துச்சென்றது. 

இதனால், வெறும் 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஹாட்ரிக் வெற்றியையும் பதிவு செய்து அசத்தியது. இதன்மூலம், பாய்ன்ட்ஸ் டேபிலில் 10வது இடத்தில் இருந்து நேரடியாக 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஒரு அணி எளிதாக ப்ளே ஆஃப் செல்ல குறைந்தது 8 போட்டிகளில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். அல்லது 7 போட்டிகளில் நல்ல நெட் ரன் ரேட்டில் வெற்றிப்பெற்றிருந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். 

அந்த வகையில், 11 போட்டிகளில் 4 இல் வெற்றிப்பெற்றுள்ள பெங்களுரூ அணிக்கு சற்று மங்கலான ப்ளே ஆஃப் ஒலியே வீசுகிறது. இன்னும் அந்த அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும் பெரிய நெட் ரன் ரேட்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதேவேளையில் ப்ளே ஆஃப் செல்ல போட்டி போட்டு வரும் லக்னோ, ஐதராபாத், சென்னை, டெல்லி அணிகள் அடுத்தடுத்து தோற்றால் அது பெங்களுரூவுக்கு சாதகமாக அமையலாம். 

ஏற்கனவே ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் ஸ்பாட்களை உறுதி செய்துவிட்டன. அதனால், தற்போது லக்னோ, ஐதராபாத், சென்னை, டெல்லி அணிகளுக்குத்தான் அடுத்த 2 ஸ்பாட்களை பிடிக்க போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களுரூவும் அந்த ரேஸில் தன்னை தக்க வைத்துள்ளது. இது ஆர்.சி.பியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow