சிறந்த வீரர்- வீராங்கனைகளை கௌரவித்த இந்திய ஹாக்கி கூட்டமைப்பு.. விருது, பரிசுத்தொகை வழங்கி பாராட்டு..

இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றன.

Apr 1, 2024 - 07:59
Apr 1, 2024 - 08:06
சிறந்த வீரர்- வீராங்கனைகளை கௌரவித்த இந்திய ஹாக்கி கூட்டமைப்பு.. விருது, பரிசுத்தொகை வழங்கி பாராட்டு..

டெல்லியில் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகள், காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றன. அதன்படி, புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த விவரங்கள் கீழ் வருமாறு... 

இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பாக 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்படுக்கப்பட்டுள்ள “ஹர்திக்:”-க்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் சிறந்த கோல் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “சவிதா”-வுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.

2024 ராஞ்சில் நடந்த FIH ஹாக்கி ஒலிம்பிக் தகுதிச்சுற்றில், தொடருக்கான சிறந்த இளம் வீரர் விருதை வென்ற “தீபிகா”-வுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 

ஓமனில் 2023ஆம் ஆண்டு நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை போட்டிகளில், தொடருக்கான சிறந்த கோல்கீப்பர் விருதை வென்ற “மொகித்”-க்கு   ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை போட்டியில் அந்த சீசனில் அதிக கோல் அடித்த “அன்னு”-வுக்கு  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

அதேபோல, 2023 பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை போட்டியில் தொடரின் ரைசிங் வீராங்கனை விருதை வென்ற ”அஞ்சலி பார்வா”-வுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2023 ஓமன் சலாலாவில் நடந்த ஆண்கள் ஹாக்கி போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற ”மனீந்தர் சிங்”-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

ஓமனின் நடந்த 2024 பெண்கள் ஹாக்கி உலக கோப்பையில் இளம் தொடர் நாயகி விருதை வென்ற “தீபிகா சோரங்”-க்கு  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற “மந்தீப் சிங்”-க்கு  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த பெண்கள் ஆசிய கோப்பைக்கான போட்டியில் தொடர் நாயகி விருது வென்ற “சலீமா தத்”-க்கு   ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

அதே தொடரில் ரைசிங் வீராங்கனை விருதை வென்ற “சங்கீதா குமாரி”-க்கு  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2022- 2023 FIH ஹாக்கி லீக்கில் அதிக கோலடித்த ”ஹர்மன்ப்ரீத் சிங்”-க்கு  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.மற்றும் சில வீரர், வீராங்கனைகளுக்கும் விருதுகளும், காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வாழ்த்துகளையும் பாராட்டையும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow