சதுப்பு நிலங்களை அடையாளம் காணுங்கள்.. அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஹைகோர்ட்

wetlands issue

Apr 26, 2024 - 17:50
சதுப்பு நிலங்களை அடையாளம் காணுங்கள்.. அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஹைகோர்ட்

நாட்டின் சதுப்பு நிலங்களை பாதுகாக்க தனி ஆணையத்தை  ஏற்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு மிகவும் உதவியாக இருப்பது சதுப்பு நிலங்கள் தான். அவற்றை பாதுகாப்பது நமது கடமை என்பதால் உயர்நீதிமன்றம் சதுப்புநிலங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சதுப்பு நிலங்கள் குறித்த  வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் சதுப்பு நிலங்களை அடையாளம்  காணும் பணியின் போது சம்பந்தபட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியின் போது நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என  நீதிபதிகள் அரசுக்கு அனுமதி  அளித்துள்ளனர். 

அதுமட்டுமில்லாமல் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். இந்த வழக்கின் முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. பல கட்ட விசாரணைக்கு பிறகு வழக்கு ஜூலை முதல் வாரத்திற்கு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow