ஒரே நாளில் ரூ.1 கோடி பறிமுதல்... பூந்தமல்லியில் பறக்கும் படை அதிரடி....
 
                                பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 2 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தனியார் நகைக்கடை, துணிக்கடைகளில் விற்பனையான ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பூந்தமல்லி தாசில்தார், துணை தாசில்தார் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            