தஞ்சை: மழைநீர் தேங்கியதால் சேறு சகதியான அரசு பள்ளி வளாகம்
சேறும், சகதியுமாக தேங்கி உள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கி நிற்கிறது.இதனால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பகுதியில் நேற்று 7ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது. கட்டத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சேறும், சகதியுமாக தேங்கி உள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகி நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?