வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க மணியரசன் வலியுறுத்தல்

வள்ளலார் பன்னாட்டு மையம் அவரது கொள்கைக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

Jan 8, 2024 - 16:52
Jan 8, 2024 - 20:19
வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க மணியரசன் வலியுறுத்தல்

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

வள்ளலார் 200-ம் ஆண்டை முன்னிட்டு ரூபாய் 100 கோடி மதிப்பில் பன்னாட்டு மையம்  அமைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் அதே வேளையில் வடலூர் பெருவெளி திடலில் அந்தப் பன்னாட்டு மையத்தை அமைக்கக்கூடாது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

எனவே அனைவரது கோரிக்கைகளையும் ஏற்று வள்ளலாரின் மரபுகளை மீறாமல் பன்னாட்டு மையத்தை சற்று தள்ளி வேறு இடத்தில் அமைக்க வேண்டும். மேலும் வள்ளலார் பன்னாட்டு மையம் அவரது கொள்கைக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 10-ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்கம், தெய்வத் தமிழ் பேரவை, வடலூர் அன்பர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மணியரசன் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow