Indian 2: ”எலெக்ஷன் வர வெயிட் பண்ணுங்க..” இந்தியன் 2 ரிலீஸ் தேதியை முடிவு செய்த கமல்ஹாசன்
விக்ரம் வெற்றிக்குப் பின்னர் கமல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் 2 சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. பட்ஜெட் பிரச்சினை, ஷங்கர் – லைகா இடையேயான மோதல், கிரேன் விபத்து, கொரோனா ஊரங்கு என பல சிக்கல்களை சந்தித்தது இந்தியன் 2. இதனால் ஒரு கட்டத்தில் இந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கமலின் விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னரே இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கினார் கமல்ஹாசன்.
இயக்குநர் ஷங்கரும் நம்பிக்கையுடன் இந்தியன் 2 படத்தை இயக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார். இன்னொரு பக்கம் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கினார் ஷங்கர். இதனிடையே இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்த ஷங்கருக்கு கமலும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். இந்தியன் படப்பிடிப்பில் கூடுதலாக ஒன்றரை மணி நேரத்துக்கான ஃபுட்டேஜ் இருந்ததால் தற்போது 3வது பாகத்திற்காக கமல் கால்ஷீட் கொடுத்துள்ளார். இது இந்தியன் 3 என்ற டைட்டிலில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியன் 2 ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் தொடங்கிய தக் லைஃப் ஷூட்டிங் இப்போது செர்பியாவில் நடைபெற்று வருகிறது. நாடளுமன்ற தேர்தலில் பிஸியாக இருப்பதால் செர்பியாவில் நடைபெறும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ளவில்லை. அதே காரணத்துக்காக தான் இந்தியன் 2 ரிலீஸ் தேதியும் அறிக்கப்படாமல் இருந்தது.
தற்போது இந்தப் படம் மே 24ம் தேதி ரிலீஸாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நாடளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதன் பின்னர் இந்தியன் 2 ரிலீஸ் தேதியை படக்குழு அபிஸியலாக அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர், அதேபோல் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?