இந்திய சூப்பர் ஹீரோ படம், ‘மிராய்’
அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம், ’மிராய்’.
இந்திய சூப்பர் ஹீரோ படம், ‘மிராய்’
- நேகா
அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம், ’மிராய்’. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ’ஹனுமான்’ படம் தேஜா சஜ்ஜாவுக்கு 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டை கொடுத்தது. இதைத் தொடர்ந்து 500 கோடி ஹீரோவாக மாறிவிடலாம் என்ற திட்டத்துடன் தேஜா சஜ்ஜா எடுத்த திரைப்படம்தான், ’மிராய்’.
வேதா பிரஜாபதி ஓர் இளம் அநாதை. அவர் தனது வாழ்வாதாரத்திற்காக பிக்பாக்கெட் அடித்து பிழைப்பதில் ஈடுபடுகிறான். இந்நிலையில் விபா எனும் ஒரு சந்நியாசினியை கவர முயற்சிக்கிறான் வேதா பிரஜாபதி. தான் உண்டு தனது பிக்பாக்கெட் பிழைப்பு உண்டு என்றிருக்கும் வேதாவுக்கு, ‘அவன் பேரரசர் அசோகரின் புனித நூல்களை போற்றிப் பாதுகாக்கும் ஒன்பது பாதுகாவலர்களில் நீயும் ஒருவன்’ என்பதை அவனுக்கு உணர்த்துகிறாள், சந்நியாசினி விபா.
கலிங்கப் போருக்குப் பிறகு, பேரரசர் அசோகர் தனது சக்திகளை ஒன்பது கிரான்தாக்களாக மாற்றினார். அவை மனிதர்களை தெய்வங்களாக மாற்றும் சக்தியைக் கொண்டிருந்தனவாம். இந்நிலையில்தான் எந்தவொரு மனிதனையும் தெய்வமாக மாற்றக்கூடிய ஒன்பது புனித நூல்களைப் பாதுகாக்க ஒரு போர்வீரன் பணிக்கப்படுகிறான்.
மகாபீர் லாமா தலைமையிலான ஒரு இரக்கமற்ற குழுவான கருப்பு வாள், கிரான்தாக்களைக் கைப்பற்றி உலகை இருளில் மூழ்கடிக்க முயல்கிறது. ஒன்பது கிரான்தாக்களில் எட்டு பேரையும் கைப்பற்றுவதில் வேதா பிரஜாபதி வெற்றி பெறுகிறான்.
இந்த செயல்பாட்டில் மிகவும் சக்திவாய்ந்தவராக மாறுகிறான் அவன். இருப்பினும், கிரான்தாக்களில் ஒன்பதாவது மற்றும் மிகவும் சக்திவாய்ந்த அமரக்ரந்தாவை அடைய அவர் தவறிவிடுகிறான்.
வேதா தனது உண்மையான அடையாளத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள ஒரு பயணத்தைத் தொடங்கும்போது மீதமுள்ள கதை விரிவடைகிறது.தேஜா சஜ்ஜா மற்றும் கார்த்திக் கட்டம்நேனியின் தெலுங்குப் படம் இது.
‘மிராய்’ படத்தை மணிபாபு கரணத்துடன் இணைந்து எழுதி இயக்கி இருப்பவர் நாகேந்திர தங்கலா. கலை இயக்குநர் தாசிரெட்டி ஸ்ரீனிவாஸ் மற்றும் திறமையான காட்சி விளைவுகள் குழுவுடன் இணைந்து ஒரு அற்புதமான காட்சி அழகியலை உருவாக்குகிறார்.
What's Your Reaction?

