இனி தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடப்படுமா? – திரையரங்கு உரிமையாளர்கள் சொல்வது என்ன?

மற்ற மாநிலங்களை போலவே தமிழ்நாட்டிலும் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Sep 24, 2024 - 15:10
இனி தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடப்படுமா? – திரையரங்கு உரிமையாளர்கள் சொல்வது என்ன?

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், “நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும். அப்படி அனுமதிப்பதால் அநேக வேலை வாய்ப்பு உருவாக்கும். 

திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதால் எந்த விதமான பாதிப்பு ஏற்படாது. அதேபோல ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் புதிய திரைப்படங்களை திரையிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ”நரிக்குறவர்கள் உட்பட அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. யாருக்கும் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் நாங்கள் விதிக்கவில்லை. யூட்யுபில் எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்படுவதால் திரையரங்கிற்கு  வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது” திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீச்செல்வம் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow