Inimel: “இனிமேல் இந்த தொல்லை இல்லை..” ஒர்க்அவுட் ஆனதா லோகேஷ் – ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி..?
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இனிமேல் ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள ‘இனிமேல்’ பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். டேட்டிங், காதல், திருமணம் என 2கே கிட்ஸ்களுக்கான பாடலாக உருவாகியுள்ள ‘இனிமேல்’ மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. முக்கியமாக இதுவரை இயக்குநராக மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ், முதன்முறையாக இந்த ஆல்பம் மூலம் நடிகராகவும் களமிறங்கியுள்ளார். இதனால் இனிமேல் ஆல்பத்தில் லோகேஷின் ஆக்டிங் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க அவரது தம்பிகள் காத்திருந்தனர்.
அதேபோல், லோகேஷ் – ஸ்ருதிஹாசன் இடையேயான கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதும் அதிகம் எதிர்பார்க்க வைத்தது. முன்னதாக இனிமேல் டீசரும் வெளியாகி ரசிகர்களை சிலிர்க்க வைத்திருந்தது. அதில், ஸ்ருதிஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் செய்த ரொமான்ஸ் இந்த ஆல்பத்துக்கு மேலும் ஹைப் கொடுத்திருந்தது. இந்நிலையில், இனிமேல் ஆல்பம் சாங் தற்போது வெளியாகியுள்ளது.
இனிமேல் பாடலை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் – ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி குறித்து பலவிதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதுவரை இயக்குநராக கெத்து காட்டிய லோகேஷ், இனி ஹீரோ அவதாரம் எடுப்பார் எனவும், அதற்கு இனிமேல் ஆல்பம் ஒரு தொடக்கமே என்றும் ஓவர் ஹைப் கொடுத்துள்ளனர். அதேபோல், டீசரில் இருந்த ரொமான்ஸ் பாடலில் இல்லை எனவும், இதற்கா இவ்வளவு பில்டப் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இனிமேல் ஆல்பம் வெளியீட்டு விழாவில் பேசிய லோகேஷ், ரஜினியின் தலைவர் 171 ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்குவதாகவும், அதனையடுத்து இரண்டு படங்கள் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இப்போதைக்கு நடிப்பு இல்லை, டைரக்ஷன் மட்டுமே எனக் கூறிய லோகேஷ், இனிமேல் ஆல்பம் பற்றி ரஜினி, கமல், விஜய், கார்த்தி ஆகியோர் கருத்து சொல்லவில்லை என்றார்.
What's Your Reaction?