உதகையில் பாஜகவினர் மீது தடியடி... அண்ணாமலை போராட்டம்...
நீலகிரியில் பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட உதகையில் வேட்புமனு தாக்கலின் போது பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதை எதிர்த்து அக்கட்சியின் வேட்பாளர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் எல்.முருகன் வேட்புமனுத் தாக்கல் செய்ய பாஜக தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். அப்போது பாஜக தொண்டர்கள் அனுமதிக்கப்பட்ட எல்லையை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்த பாஜக தொண்டர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மத்திய இணையமைச்சரும், வேட்பாளருமான எல்.முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஊட்டி எஸ்.பியை பணியிடை நீக்கம் செய் வலியுறுத்தி இருவர் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவினரின் போராட்டத்தை அடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் கண்காணிப்பாளர், சூழலை எடுத்துக் கூறினார்.தொடர்ந்து காவல்துறையின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அண்ணாமலை அறிவித்தார். இதையடுத்து பாஜகவினர் அனைவரும் கலைந்து சென்றனர்.
What's Your Reaction?